விதவை
ஓ பெண்ணே !!!
நீ விதவை என்பதை
அடையாளம் காட்ட,,,,
உன் நெற்றி
பொட்டை எடுத்தே
நிலவு பொட்டாக
வானுக்கு
அளித்து விட்டாயா !!!!!
நீ கூந்தலில் சூடும்
பூக்களை எடுத்தே,,,
மேக பூக்களாக
வானுக்கு
அளித்து விட்டாயா !!!!
எந்த பெண்ணும்
அளிக்காத
இத்தனையும் அளித்து,,,,
வானின்
வெண்மை ஆடையை
வாங்கி நீ
அணிந்து கொண்டாயா !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
