அனுபவம் -வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து

ஏடெடுத்து படிக்கையிலே விளங்காத சொந்தபந்தம்
பாடுபட்டு சேர்த்ததை கேடு கேட்டு தொலைத்து
மாடு மேய்க்க வக்கில்லா மடையன் என்று
மக்கள் சுற்றம் மேடுறுத்தி கூறுகையில்
காசு பணம் வேண்டும் என்று கையேந்தி
கூறு கெட்டு பொய்யுரைத்த பந்தம்
கேடு கெட்டு போனதனால், உழைப்பு மற்றும்
ஊன் உருக்கி சேர்த்து வைத்த செல்வமெல்லாம்
போன இடம் தெரியலே, ஏட்டினிலே எழுதாமல்
வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து
போக்கிடம் தெரியாமல் புழுங்கி நிற்கையில்
ஏட்டினிலே இல்லாத எவரும் சொல்லாத
பாடம் இன்று விளங்குது.

எழுதியவர் : கும்மாச்சி (16-Oct-13, 9:51 pm)
சேர்த்தது : கும்மாச்சி
பார்வை : 81

மேலே