ஒரு தாயின் புலம்பல்

வீதி வழியே
குடை பிடித்து
செல்கிறவர்களே,,,,
நான் சொல்வதை
சற்று நின்றே
செவி கொடுத்து
கேளுங்கள்,,,,
நான் எனது
மேக மகளை
வானம் எனும்
ஆடவனுக்கு,,,
மனம் முடித்து வைத்தேன்
அவள் வாழ்வாங்கு
வாழ்வாள் என்று!!!!
ஆனால் அவனோ
எனது மகளை
வரதட்சணை
வாங்கி வா என்றே
இடி, மின்னல் எனும்
ஆட்களை வைத்து
அவளை இம்சிக்கிறான்!!!
இம்சை தாளாமல்
என் மகள்
கண்ணீர் விட்டு
அழுகிறாள் !!!!!
நீங்களோ அவளது
வலி தெரியாமல்
குடை பிடித்து
செல்கிறீர்களே !!!!!

எழுதியவர் : umamaheshwari kannan (16-Oct-13, 10:16 pm)
பார்வை : 145

மேலே