ஏமாற்றங்களும் இப்பிரிவும்தான் நீ தந்த சத்தியங்களா?

உன் பிரிவைவிட நீ தந்த
ஏமாற்றங்களே அதிகம்,
நினைவிருக்கின்றதா ...
எத்தனை முறை காதலில்
சத்தியம் செய்திருக்கின்றாய் ?
ஏமாற்றங்களும்
இப்பிரிவும்தான்
நீ தந்த சத்தியங்களா?
உன்னை மறக்க முடியாத
பொழுதுகளில்
நீயும் என்னைப்போல ...என்னை
நினைத்துகொண்டிருப்பாய்
என்று
நம்புகின்ற அப்பாவித்தனம்
தான்
என் காதலா?

எழுதியவர் : புனிதன் (17-Oct-13, 4:52 am)
சேர்த்தது : punithan
பார்வை : 160

மேலே