நன்றி சொல்லலாமே..

மூன்றெழுது நல்லசொல்
முகம் மலரசெய்யும்சொல்
எல்லோரையும் மதிக்கும்சொல்
யாவரிடமும் பண்பாகசொல்!

சின்னதோ பெரியதோ வேலையை
நல்லபடி முடித்தவர்க்கு
"நன்றி" என்று சொல்லிப்பார்
நன்மைகளை உண்டாக்கும்!

நாளைய வேலைகளும்
சிறப்பாக முடிக்கவைக்கும்!
நம்முகம் பார்க்கும் மற்றவரின்
முகம் மலரவைக்கும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 4:33 pm)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 154

மேலே