சிவானந்த சத்தியமே !!!(கார்த்திக்)

ஒரு துளி விந்தினில்
ஒரு கோடி உயிராம்
ஒரு கோடி உயிரினில்
ஒரு உயிர் நானாம் !!!!
இரண்டு ஐந்து மாதம்
கருப்பையில் சிசுவாய்
தாயவள் வயிற்றினில்
தவம் செய்ய வைத்தான் !!!
நாசிக்குள் காற்றை
ஊதியும் வைத்து
உயிரோடு அதனை
ஒட்டவும் வைத்தான் !!!
உடலுக்குள் உயிராய்
ஊற்றாய் உருமாறி
அண்டத்தில் உள்ளதை
பிண்டத்தில் வைத்தான் !!!
விந்தைகள் ஆயிரம்
சமைத்தான் மண்ணில்
நற்சிந்தைகள் ஆயிரம்
படைத்தான் எம்மில் !!!
முந்தை வினையோடு
இம்மை வினையையும்
அழிக்கும் முறையையும்
அளித்தனன் புத்தியில் !!!
புத்தியில் புதிதாய்
பிறக்கும் தத்துவமாய்
சித்தத்தில் ஒளிரும்
சிவானந்த சத்தியமே !!!
*****************************************************************
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்