எனக்குள் யார் இவர் ??

இல்லையென்று சொல்லாமல் எதற்கு
என்றுரைக்கும் எண்ணம்தான் எப்போதும்
அவருக்கு ...

வேண்டியதை உடனேயும் கேட்டதை
நிதானித்தும் வாங்கித்தரும் வள்ளல்தான்
அவரும் ...

பாசத்தை மட்டுமே ஆயுதமாய்
வீக்கமாய் கொண்டு உலவும்
உயிர்தான் ...

பணத்தை மதிக்கும் மாந்தருள்
குணத்தையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும்
வேந்தர் ...

சினத்தையும்கூட வெளிக்காட்டாமல் சிரத்தில்
அடக்கி ஆளுமை செய்யும்
வித்தைக்காரர் ...

நான் ஆண் எனக்கூறி
செய்யேன அதிகம் செய்யாத
ஆவலர் ...

கடுன்சொல் சொன்னாலோ அகத்தை
காட்டினாலோ பிறர்மனம் புன்படுமெனகூறும்
பாவலர் ...

எடுத்த வேடத்தை ஏற்றுனடிப்பதில்
திலகத்தையே மிஞ்சும் சிறந்த
நடிகருமாவார் ...

வியாபாரமும் கைவந்த கலைதான்
என்றாலும் கடனளிப்பதிலும் வள்ளலான
செம்மலாவார் ...

சமாளிப்பதில் சாதனை படைப்பவர்தான்
என்றாலும் அதனால் பலசமயங்களில்
சிக்கல்தான் ...

சுத்தம்தான் சோறுபோடும் என்றாலும்கூட
சோம்பலால் சுத்தத்தையே மறந்துபோகும்
மன்னர் ...

நோயிதரும் வலியைவிட வாயிற்கு
கடிவாளம் போடும் கலையில்
வித்தகர் ...

யாருக்கேனும் கண்ணீர் வந்தால்கூட
தனதுவிழிகளும் சிவந்து போகும்
செந்நீருமவர் ...

நீங்கள் யாரென கேட்பதற்குமுன்
சொல்கிறேன் இவையெல்லாம் சேர்ந்தவர்தான் என்தந்தை ...

எழுதியவர் : வீரா ஓவியா (18-Oct-13, 10:32 am)
பார்வை : 51

மேலே