உடல் விட்டு உயிர் போகும் முன்னே

உண்பதும் உறங்குவதும் தவிர

வேறென்ன செய்து விட்டோம் நாம் ?

எங்கோ ஒருவன் கண்டு பிடித்து

தருவதை கூட இன்னும் உருப்படியாய்

உபயோகிக்ககூட கற்றுக்கொள்ளவில்லை நாம்

இறைவன் படைப்பில் எதுவும் சோடை

போனதல்ல .... எனில் .....

நாம் மட்டும் ஏன் இப்படி ...?

இன்றேனும் உறுதி எடு ....

இந்த உடல் விட்டு உயிர் போகும் முன்னே ....

புது படைப்பொன்று காண்போம்....என ... ஆம்

மண்ணில் நாம் வாழ்ந்ததன் வடுக்கள் ....

நாளைய மனிதம் காக்கட்டும் ....

எழுதியவர் : கலைச்சரன் (19-Oct-13, 9:04 am)
பார்வை : 134

மேலே