கல்லூரி கடைசி நாள்....
இயற்கை அன்னையே !
பிரியும் வேளையில் பொழிந்த மழையே!
எங்கள் கண்களின் வெள்ளப்பெருக்கை
நினைத்துதான் நீ அழுதாயா - இல்லை
இதயப்ப்ரிவின் எரிமலை குமுறலை
அணைக்க மழை பொழிந்தாயா ?
வகுப்பறையை விட்டு வெளியேற
வேண்டாம் என்று நினைத்தாயா - இல்லை
வாய்விட்டழும் சப்தம் தெரிய வேண்டாம்
என்று தன நீ நினைத்தாயா?
மனமழுது நிரம்பி மறுகால் தான்
மழையாய் நீ பொழிந்தாயா?- இல்லை
கண்ணீர் துளிகளால் கல்லூரி வளாகம்
கறைபடிந்துடுமென சுத்தி கரித்தாயா?
சுகங்களையே சுமந்த நாங்களினி சுமைகள்
சுமக்க போவதை நினைத்து அழுதாயா?-இல்லை
கடைசிநாளில் காலடிச்சுவடிகள் கல்லூரி மண்ணில்
பதிய வாய்ப்பளிதாயா?
எதுவாயிருப்பினும்
எல்லாமுமாகயிருப்பினும்....
தொலைந்து போகும் முகவரிகள்
தளிர்க்க துணை புரிவாயா?
காலச் சுவடியில் கல்லூரி வாழ்வு
கரைந்திடாமல் தடுப்பாயா?
வகுத்தெடுத பாடங்கள்
வளம் கொழிக்க அருள்வாயா?
தொடர்ந்து வரும் துன்பங்கள்
தகர்த்தெறிய செய்வாயா?
அறுபதாம் வயதிலும் அனைவரையும்
அடையாளம் காணச் செய்வாயா ?...
.............................சரவணகுமார் தாம்சன்