வலி ............?

உனக்கெங்கே தெரியும்
என் இதயத்தின் வலி
அது தான் என்னைத்
தள்ளி நின்று சிரிக்கிறாய் !!!

உனைப் பிரிந்த
ஒவ்வொரு இரவும்
ரணமாய் கழிவது
உன் மனதிற்குப் புரியாது !!!

ஏன் பெண்ணே
என்னை சந்தித்தாய்
சாகடிக்க யாரும்
கிடைக்க வில்லையென்று
என்னை தேர்ந்தெடுத்தாயோ !!!

என்னைத் துண்டுதுண்டாய்
கொல்வதற்கு மொத்தமாய்
கொன்று விட்டுப்போ
இல்லை என்றால்
தின்று விட்டுப்போ !!!

கை பிடித்து
நடந்த போது
களிப்பூட்டினாய் -எனை
விட்டுச் சென்ற போது
வெறுப்பூட்டினாய்!!!

என்னை விட
அவனிடம் என்ன
அதிகமென்று என்னை
மறந்து அவன் மேல்
சென்றது உன் மனது ???

பெண்ணே கேள்
துச்சமென எனை
நினைத்து பச்சைக்
கிளியாய் பறந்து
அவனிடம் சென்றாய் ???

இன்றுனக்கு ஒன்று
கூறுகிறேன் கேள்
உன்னை மட்டும்
நினைத்து வாழ நானொன்றும்
தேவதாஸ் இல்லை ???

பச்சை கிளி உனக்கொரு
பருந்து கிடைக்கும்போது
கீரிப்பிள்ளை எனக்கொரு
பாம்பாவது கிடைக்காதா
படமெடுத்து ஆட ???

போடி போ
என்னை விட்டுப் போ
திரும்பி பார்க்காமல் போ
பார்த்து விட்டால்
பாவி மனசு பரிதவித்தால்.............???

எழுதியவர் : சஹானா (21-Oct-13, 12:01 am)
பார்வை : 455

மேலே