உள்ளம் கொள்ளை போகுதடா

என் அமைதியின்
அர்த்தங்கள்
அறிந்திடும் போதும்.....

உன் வார்த்தைகள்
என் மௌனத்தை
கலைத்திடும்போதும்.....

உன் பார்வைகள்
என் வெட்கத்தை
சீண்டிடும் போதும்......

நீ இல்லா நேரங்கள்
என்னை
வாட்டிடும்போதும்.....

காதலில்
என்னை மறந்து
உன் தோள்
சாய்ந்திடும்போதும்....

உன் ஆண்மையில்
தாய்மை நிறைவதை
கண்டிடும் போதும்.....

என் உள்ளம்
கொள்ளை போகுதடா
உன்னிடம்.....

எழுதியவர் : இலக்யா. (21-Oct-13, 3:57 pm)
பார்வை : 773

மேலே