கார்கில் போர் வீரனுக்காக !
ஓ வீரனே நீ வாழ்க
உன் மரணமும் ஓர் ஜனனமே!
நள்ளிரவென்றும் பாராமல் நடுங்கவைக்கும் குளிருளும்
துள்ளும் எலிகளாய் வான் வணங்கும்
மலையில் ஒளிந்த எதிரிகளின்
குண்டுகளை மார்பில் தாங்கிய
சூரனே நீ வாழ்க
உன் மரணமும் ஓர் ஜனனமே!
தன்தாய்நாட்டின் தகைமை காக்க
தாய் தள்ளி தாரம் தள்ளி
பெற்ற மக்கள் தள்ளி
விழிவழி உதிரும் நீர் தள்ளி நின்ற
மாவீரனே நீ வாழ்க
உன் மரணமும் ஓர் ஜனனமே!
உன் உதிரத்தால் இந்நாடு வாழ
சரித்திரம் எழுதிய தியாகியே
நீ வாழ உன் புகழ் வாழ
என் விழிகளில் நீர் வழிய
தேச பக்தியுடன் உன்னை வாழ்த்துகிறேன்
ஓ வீரனே நீ வாழ்க
உன் மரணமும் ஓர் ஜனனமே !
மூவர்ணக்கொடி பறக்கிறது
நீ சுவாசித்தக் காற்றில் !