உன் ஒரு வார்த்தையில்
மொழியாக வந்து கண்களால் இணைந்து
நெஞ்சோடு கலந்த உறவு நீ தான்...
காயங்கள் மறக்கும் நினைவுடன் வாழும்
உறவு நான் தானே...
உன் பார்வையில் பூத்த நானின்று
உன் மொழியை கேட்க வாடுகிறேன்...
என் உறவை மறந்து, நம்பிய காலங்கள் மாறி
உன் உலகத்துடன்-உறவை பெற சுவாசிக்கின்றேன்.
ஏ! உன் ஒரு வார்த்தையில்
என் வாழ்க்கை அடங்கும் இப்போது......