விக்கிரமாதித்தனும் வேதாளமும் ..

விக்கிரமாதித்தனும் வேதாளமும் .. கதைகள் நிறைய கேள்விப்பட்டு இருப்பீர்கள். விக்ரமாதித்தனின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியுமா, உங்களுக்கு ? இதோ, என் கற்பனை.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதில் இருந்து வேதாளத்தை கீழ் இறக்கி தன் தோளின் மீது சுமந்து சென்றபொழுது வேதாளம் அவனிடம் கேட்டது.

ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் ஔவை மூதாட்டி. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றாரும் உண்டு வையகத்தில். ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் தேசியகவி பாரதியார். பிறகு ஏன் ஜாதிகளின் பெயரில் அரசியல் கட்சிகள் தோன்றின ? ஏன் ஜாதிக்கு சான்றிதழ்கள் தருகிறார்கள் அரசியல்வாதிகள் ?

இதற்கு சரியான பதிலை நீ தராவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும் என்றது வேதாளம்.

வெகு நேரம் யோசித்த பின்னும் விக்கிரமாதித்தனுக்கு இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் போனதால், விக்ரமாதித்தனின் தலை வெடித்து சுக்கு நூறாகி தரையில் வீழ்ந்தான்.

எழுதியவர் : (22-Oct-13, 3:22 pm)
பார்வை : 140

மேலே