துணிவு இருந்தால் தோல்விகள் இல்லை
எண்ணித் துணிக என்றான்
கண்ணில் தெரியுது சிலந்திவலை
பின்னிப் பழகுவோம் அதனை
மண்ணில் இனிமை சவால்கள்...!
பணிந்தே பதுங்கினால்
பாயும் துயரங்கள்.......!
துணிந்தே இறங்கினால்
துவம்சம் தோல்விகள்.....!
இப்போதே தொடங்கு
இருக்குது போட்டிகள்...
துணிவு ஒன்றே உனக்கு
தூரமில்லா சொந்தங்கள்....!