விளங்கிக் கொண்ட விழிகள்

பழக ஆயிரம் பாரினில் உண்டு
பார்ப்போம் விழிகளை நாமும் விரித்து....!

அங்கே துளிர்ப்பது பசும் தளிராம்
அதற்குள் பச்சையம் அன்பென்பதாம்....

அகத்தின் அழகே முகத்தினிலே - அதை
அன்போடு பழகியது சிறு தளிரே

அடடா இனிமை அதிகாலை
அதனால் பிறந்தது இக்கவிதை....!

விழிகளில் விளக்கம் தெளிவானால்
விடியல் தினமும் இனிதாகும்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (23-Oct-13, 11:08 am)
பார்வை : 63

மேலே