காதல் kavithai

உன் கண்கள் மூடிவிட
பகலும் மறைந்ததென
நிலவும் வந்து விடுமோ !

இது காமன் கண்ட
இதழ் பிளந்து விட்டதென
தேனீ வந்து விடுமோ !

மேகம் கண்டு உன்னை
தீண்ட வந்ததென
மழையும் சேர்ந்து வருமோ !

தேகம் நனையும் என
திரும்பி சென்றதடி
மழையும் கண்ட அழகோ !

பூக்கள் பார்த்து
புது தேசம் என்று
உனில் மயங்கி விழுந்து விடுமோ !

பாதம் வலிக்கும் என
புது பாதை தந்து விட
இது பூக்கள் தந்த இதமோ !

முழுநேரம் மதியை கண்டது
சூரியன் தானம்மா !

முழுநேரம் மறந்து போனது
உன் பார்வையில் நானம்மா !

முகம் தேடி
வானவில் வந்தது
புது ஓவியம் நீயம்மா !

அகம் தேடி
நானும் வந்தது
என் காதலை சொல்லம்மா !

சுடிதாரில்
சாலையில் வந்தது
ஏனடி அம்மம்மா !

சுடும் தாரில்
பாதமும் பட்டதில்
சாலையும் வெந்ததம்மா !

கரம் பிடித்து வந்தவன்
நானடி செல்லம்மா !

சிரம் தேடி
தாழியும் தந்தது
காதலன் நானம்மா !

(சதீஷ்கவிதை)

எழுதியவர் : சதிஷ்கவிதை (23-Oct-13, 9:03 pm)
பார்வை : 138

மேலே