கவிஞனின் படைப்பு
எழுத்தைப் பதிப்பது பெருஞ்ச செயல்
எழுதவதை விட
எழுதி விடலாம் எளிதாக
நினைப்பதை வடிப்பது
ஒரு பிரசவம்
கற்பனை புரண்டு
எழும் போது
கை வேலை செய்ய
எண்ணங்கள் சொற்களாகத் திரள
உணர்வுகள் அவற்றுடன் கலக்க
கரு வளர
பிறக்கிறது கவிதை
உற்று வெள்ளம் பெருக்கெடுக்க
எழுத்து வேகமாக உருண்டோட
கவிதை வளமோடு சுகப் பிரசவம் ஆக
மனம் கொள்ளாத ஆனந்தம்
கொள்கிறான் கவிஞன்.
எழுத்தை உலகுக்க் கொணர
அவன் அடையும் துயரமோ
சொல்லி மாளா
ஏறாத படியில்லை
தட்டாத கதவில்லை
வாங்காத பேச்சில்லை
பார்க்காத ஆளில்லை
கிடைத்தது ஏச்சும்
பேச்சும் துரத்தலும்
கைவிரிப்பும் சலனமும்
வெறுங் கையேடு திரும்பி
நெஞ்சைக் பிடித்து
எழுதுகிறான் கவிஞன்
பாவம் அவனுக்கு
வேறு எதுவும் தெரியாது.