நாய்க்குட்டி!(குழந்தைப் பாடல்)
நாய்க்குட்டி நாய்க்குட்டி!
நானுங்கூடச் செல்லக்குட்டி.
அப்பாவுக்கு நல்லக்குட்டி.-நம்ம
அம்மாவுக்கு வெல்லக்கட்டி.
என்னோட நீயுங்கூட
ஒன்னா சேந்து விளையாட
என்னோட நீயுந்தான்-நல்லா
ஒன்னாவே வளரனும்.
அம்மா சொல்லத் தட்டாதே!
அடுப்படிக்குப் போகாதே!
அங்க இங்க ஓடாதே!-பட்டே
அதை இதைக் கொட்டாதே!
வள வளனு தரை இதே!
வழுக்கி விடும் ஓடாதே!
மள மளனு வளரனும்-பாலே
மட மடனு குடிக்கனும்.
விடு விடுனு அலையாதே!
வீட்டு வெளியே போகாதே!
புடு புடுனு வண்டிகள்.-நீயே
பட்டு அடி வாங்காதே!
நல்லப் பாப்பாப் பேரெடு!
நாளை வீட்டைக் காத்திடு!
கொண்ட நன்மை போற்றிடு!-நெஞ்சு
நன்றி அன்றுக் காட்டிடு!
கொ.பெ.பி.அய்யா.