திருத்துங்கள் யாரேனும் முடிந்தால்

குடும்பத்தில் ஒற்றுமை தேவைதான்
குடும்பமே ஒரேவாகனத்தில் பயணமா !

நல்லவேளை ​நான்கோடு ஒன்று இங்கே
இன்னும் ஒருவரெனில் இடமேது இங்கே !

விபத்து நடந்தால் விளைவுதான் என்ன
ஆபத்தைத் தேடி ஆர்வமுடன் பயணமா !

சிந்திக்கும் திறனே இல்லையா இவர்களுக்கு
நித்தித்தாலும் நித்தம் காணும் காட்சிதான் !

கவிதைகள் பிறக்குது கண்டித்து இவர்களை
கலங்குது மனமும் நினைத்தால் இவர்களை !

திருந்துங்கள் உள்ளங்களே நீண்டு வாழ்ந்திட
​திருத்துங்கள் யாரேனும் முடிந்தால் இவரை !​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Oct-13, 11:59 am)
பார்வை : 156

மேலே