அரசியல் அரசியல்வாதி 5

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

இதுவரை....

ஏழை மாணவன் ராஜ்குமார், தன் படிப்பு உதவிக்காக பணம் கேட்ட அந்த ஊர் எம்.எல்.ஏ காசிநாதனை எதிர்க்க, அந்த மோதலின் உச்சத்தில் அவனின் தந்தை மராடைப்பால் காலமானார். பின்பு கடனாக பெற்ற பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளும் கட்சி அலுவலகம் என அரசியல் மேலுள்ள வெறுப்புணர்ச்சியையும் தன் உரிமையும் கேட்க ஆவேசமாக அலைந்தான். சாலை கடக்கும் போது கட்சி வாகனம் ஒன்று அவன் மீது மோதியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறான். அங்கு அவனுக்கு உதவிகரமாக மருத்துவ ஊழியரும் , அவனை காப்பாற்றிய அன்சாரியும் இருந்தனர்.. அன்சாரிக்கு அவனைப்பற்றி விசாரித்து செல்போன் அழைப்பு ஒன்று வருகிறது...

இனி .........

-------------------------------------------------------------------


அரசு மருத்துவமனை.........

“டாக்டர் ! உங்களால குணப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சும் எதற்கு தனியார் ஆஸ்பிட்டல் போக சொன்னீங்க.?
அங்க 3 நாள் செலவு செஞ்சும் கடைசில என் மகளை காப்பாத்தமா பிணமாத்தான் கொடுத்தானுங்க. செத்துடுவான்னு தெரிஞ்சு எதுக்கு அங்க கொண்டுப்போக சொன்னீங்க...”

நடுத்தர வயது மனிதர் ஒருவர் அந்த அரசு மருத்துவமனையின் டாக்டரை கேள்வி மேல் கேள்வி கேட்டு தன் ஆதங்கத்தை காட்டிக்கொண்டிருக்கும் சத்தம் ராஜ்குமாருக்கு கேட்கிறது.
அவனோடு பிரியமாக பேசிய அந்த மருத்துவ ஊழியரை அழைக்கிறான். “மாணிக்கம் அண்ணா ! அங்க என்ன சத்தம். யாராவது செத்துட்டாங்களா”

“ஆமா ராஜ் போன வாரம் அவரும் அவர் சம்சாரமும் தன் மகளுக்கு காய்ச்சல்ன்னு இங்க ட்ரீட்மெண்ட்க்கு வந்தாங்க. அந்த பொண்ணுக்கு என்ன நோய்ன்னு தெரியல... 2 நாள் வச்சிப்பார்த்து பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு போனா காப்பாத்த முடியும்ன்னு சொல்லி இருக்கான் அந்த படுபாவி டாக்டர்... அந்த பிரைவேட் ஹாஸ்பிட்டலே அவனோட சொந்தக்காரன் நடத்துற ஹாஸ்பிட்டல் தான். பிழைக்க முடியாத கேஸ் தான் என எங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். கவர்மெண்ட் டீன் டாக்டர் கூட காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு. ஆனா இவன் காசுக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டான்.”

“அண்ணா அந்த ஹாஸ்பிட்டல் யாருக்கு சொந்தம்.?”

“அதுவா முன்னாள் அமைச்சர் ......... க்கு சொந்தம். எவனும் யோக்கியம் இல்ல.. எல்லாம் களவாணி பசங்க. நான் மட்டும் இவனுங்கள தட்டி கேட்குற பதவில இருந்தா.. ஒரு வழி பண்ணிடுவேன். ஹம்ம்ம் எங்க ? நானும் டாக்டருக்கு படிச்சேன் 4 வருஷம் .. விதி என் வாழ்கையை மாத்திடுச்சி”

“நேத்து என்னை காப்பாற்றி இங்க அட்மிட் பண்ணினாருல்ல.. அவர இன்னும் காணோமே. அவரும் அவர் பொண்ணும் வரதா சொல்லிட்டு போனார்”

“ஒ அன்சாரி சாரா ? வருவார்.. உனக்கு தெரியுமா? நீ கட்சி ஆபிஸ்ல பார்த்த மந்திரி பி.ஏ . நீ ரோட்லஅடிப்பட்டது அப்புறம் அன்சாரி சார்தான் உன்னை காப்பாற்றினார் என்று எல்லாம் தெரிந்துக்கொண்டார், உன்னை நல்ல விதமாக பார்த்துக்க போன் பண்ணி அன்சாரிக்கிட்ட அந்த நல்ல மனிதர் சொல்லியிருக்கார்.
அன்சாரி சார் யார் தெரியுமா ? .அவர் ஒரு முன்னாள் பொது பணித்துறை IASஅதிகாரி . அவர் மேல இல்லாத பொய் எல்லாம் சொல்லி அவரை வேலைல இருந்து தூக்கிடானுங்க.. எல்லாம் இந்த பாழாய்ப்போன அரசியல் பண்ற வேலை. அவர் மகள் டி.வி ரிப்போர்ட்டர் .. செய்தி சேனல்ல வேலை பாக்குறாங்க”

“ஓஹோ... நல்ல வேளை அவர் வர நேரத்துல நான் அடிப்பட்டேன். இல்லைன்னா நானும் எங்கம்மா கிட்ட போயிருப்பேன்.”

“சரிப்பா ........அதிகமா பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்.. நீ மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம். நீ என் கூட வந்து தங்கிக்கோ..எனக்கும் ஒர் ஆதரவா இருக்கும்”

ரொம்ப நன்றி அண்ணா....

------------------------

“டாக்டர்.. அந்த பையனுக்கு எப்படி இருக்கு.?” அன்சாரி
“இன்னும் 3 மன்த் கம்பிளீட் ஹோம் ரெஸ்ட்ல இருக்கணும். இடது கைக்கு நல்ல பிராக்டீஸ் பண்ணனும். அந்த பையனுக்கு யாரு இருக்கா?”

“ அவனுக்கு சொந்தம் யாருமில்ல... அவன் பேக்-ல கொஞ்சம் பணம் மற்றும் அடையாள அட்டைகள், மார்க் சீட், சர்டிபிகேட்ஸ் எல்லாம் இருக்கு. பாவம் வயசு பையன். நாங்க கேர் எடுத்துக்றோம். ”

“நைஸ்.... இந்த காலத்துல இப்படி ஒரு மனிதாபிமானம் பார்ப்பது .......... ஹேட்ஸ் ஆப் மேன்... ! அவனுக்கு எதோ கொடுத்து வச்சிருக்கு.”

மருத்துவ ஊழியர் மாணிக்கம் வீடு , ராஜ்குமாருக்கு தங்க ஒரு இடமாக அமைந்துவிட்டது. அன்சாரியும் அவனுக்கு தேவைப்பட்ட உதவி செய்து கொண்டிருக்க. அவனுக்கு அது சில ஆறுதல்களை தந்து கொண்டிருக்கிறது.

சில நாட்கள் கழித்து.........

“என்ன ராஜ் .. ? உனக்கு என்ன குறிக்கோள். என்ன படிக்க ஆசைப்படுற,? சொல்லு இங்கு இருக்கிற டிரஸ்ட் மூலமா ஏற்பாடு பண்ணலாம்.” அன்சாரி

“இல்ல சார்......எனக்கு படிக்கிற ஆர்வம் இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு தப்பா தெரியுற இந்த அரசியலை மாத்தணும். அந்த காசிநாதனை ஒரு வழி பண்ணனும். ? எல்லாமே போர்ஜரி.. அரசியல்ன்னு சொன்னாலே எல்லாரும் ஒதுங்கிப்போறாங்க.. சின்ன வயசுல நான் படிச்ச கம்யூனிசம் இப்போ இல்ல. நான் படிச்ச அரசியல் அறிவியல் ... எங்கேயும் பார்க்க முடியல.

அரசியல்ன்னா .. முதுகுல குத்துற செயல்ன்னு அர்த்தம் மாறிப்போச்சி........ எனக்கு ஒர் டவுட் சார் .. ஏன் ஆ ஊ ன்னா போராட்டம் பண்ற எல்லாரும் அரசியல்ன்னா என்னான்னு தெரிஞ்சிக்க மாட்டிங்கிறாங்க. அவங்களுக்கு தேவை ஒர் விளம்பரம். டிவில பேட்டி கொடுத்திட்டு.. போராட்டம் வெற்றின்னு போயிடுறாங்க. ஆனா அந்த போராட்டம் வருவதற்கு என்ன காரணம்...?. அடிப்படை அரசியல் விதியை கடைப்பிடிக்காம இருக்கும் அதிகாரிங்க, எம்.எல்.ஏ. எம்.பி .., ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லாரும் காரணம்ன்னு புரிஞ்சக்கணும். படிச்சவங்களுக்கு அக்கறை இல்ல .... கேட்டா .. அரசியல் சாக்கடை, இந்த அரசியல் எனக்கு ஆகாது. அவன் சுதந்திரமா வாழ்வதே இந்த அரசியல்னால தானே.. அப்புறம் எப்படி ஆகாதுன்னு சொல்றான்,..அரசியல்ன்னால நான் கொஞ்சம் தான் பாதிக்கப்பட்டேன்.. என்ன ? அம்மா இல்ல ... அப்பா இல்ல..... ” அவன் பேச்சில் விரக்தியும் அவனின் பார்வையில் ஒரு தீயையும் கண்டார் அன்சாரி.

“இந்த வயசுல இவனுக்கு தோணுகிற ஒரு அக்கறை நமக்கு ஏன் தோணல. இந்த அரசியல்னால தானே நானும் பாதிக்ப்பட்டேன். ஆனா அது மாத்தணும் எனக்கு ஏன் தோணல” என்று சிந்தனையில் இருந்த அன்சாரியை

“அப்பா!! நானும் ராஜ் சொல்வதை கேட்டுகிட்டு தான் வந்தேன்......... அவன் சொல்வதில நியாயம் இருக்கு. சரி ராஜ் !! உன்னால என்னால மட்டும் எப்படி இத மாத்த முடியும்.. அரசியல் பெரிய கடல் போல... மாற்றம் வேணும்.... ஆனா கடல் போன்ற அரசியல்ல கலந்த சகதி, குப்பையை எப்படி தூர் வாரமுடியும்.? நீ சொல்வது , நீ பார்த்தது சில விஷயம் மட்டும்தான். மாற்றம் தேவைன்னா.. அதற்கு நீண்ட போராட்ட வேணும்ப்பா “ அன்சாரியின் மகள் ஜாஸ்மீன்.

“அக்கா ...! நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க?”

“ம்ம் கேளுப்பா ”

“கடலுக்கு எங்கிருந்து தண்ணீ வருது.?”
“ ஆறு, நதி,ஏரி என எல்லாத்துல இருந்துதான்”

“அப்போ ஆற்று தண்ணி, ஏரி தண்ணிய தூர்வாரலாம் இல்லையா.. அதுக்கு அப்புறம் தானா கடல் சுத்தமாகிடும்.. மீறி வருகிற குப்பையை கடல்ல இருக்கிற சட்டம் எனும் மீன் இனங்கள் கவனிச்சிக்கும்.. என்னக்கா நான் சொல்றது சரியா ? ”

ஜாஸ்மீன் அவளையும் அறியாமல் கைதட்டினாள்... ராஜ்குமாருக்கு கிட்ட போய் “ டேய் நீயா சின்னப்பையன்.. கேடிடா நீ........ அப்பா........ ராஜ் சொல்றது போல ஒர் அரசியல் புரட்சி அத்தியாத்தை ஆரம்பிக்கலாம்”

“என்னங்க நீங்க, சினிமாவா இது...... கதை கதையா பேசி மாற்றம் கொண்டு வரலாம். ஆனா இது நிஜ வாழ்க்கை ? எப்படி என்ன பண்ணப்போறீங்க...? ஒரு வார்டுலேயே எந்த மாற்றத்தையும் பண்ணமுடியாத இந்த காலத்துல தமிழ் நாடு முழுக்க எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். சின்ன புள்ளத்தனமா இருக்கு.. வயசுப்பையன் ஏதோ ஆவேசப்படுறான்னா .. நீங்களும். அரசியல் மாற்றம் எல்லாம் பண்ண முடியாது” அங்கு வந்த மாணிக்கம் குதர்க்கமாக பேச..... ராஜ்குமார் தன் பேச்சில் மிக தெளிவாக

“முடியும் அண்ணா..... முடியும்ன்னு நினைச்சதுனால தான் சச்சின் 16 வயசுல கிரிக்கெட்டிற்கு வந்தாரு......... அவருக்குன்னு ரசிகப்பட்டாளம் வந்ததற்கு காரணம் அவரோட முயற்சி... பயமறியா முயற்சி மட்டுமே... இப்போ அவரை அரசியல் எதிர்பார்க்குது. காரணம் அவரின் தன்னம்பிக்கை,. நான் இத சொல்வதற்கு காரணமிருக்கு…… அவர் தான் சார்ந்த விளையாட்டுக்கு மட்டும் பயற்சி செஞ்சது மட்டுமில்லாம , அத எப்படி , எங்க பயன்படுத்தினார் என்பதுல இருக்கு அவரோட வெற்றி. இது தனி மனிதன் ஒருவரின் சாதனை

ஆனா நான் பண்ணபோவது... கூட்டு முயற்சி.............

என்னால இன்னும் 5 மாசத்துல அரசியல்ல பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.. ரொம்ப சிம்பிள்.

உங்க சப்போர்ட் மட்டும் போதும்”

அன்சாரி, ஜாஸ்மீன், மாணிக்கம் மூவரும் புருவத்தை உயர்த்தி அவனை உற்று நோக்குகின்றனர்..

தீர்க்கதரிசியாக அவர்களுக்கு காட்சி அளிக்கிறான்......

பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போகும் அவனின் எண்ணம் என்ன ? அந்த மூவரின் மூளையிலும் இந்த கேள்வித்தான் இப்போது……….
-----------------------
கரு மேகங்கள் தன் நிலையினை மாற்றி ஈரப்பதத்துடன் கதிரவனின் துணையோடு ஒளிச்சிதறலில் வானில் அழகிய வானவில்லை வரைந்து காட்டுகிறது……. எதையோ சாதிக்க மேகங்கள் தன்னை தயார்படுத்துகிறதோ……..?


----------(தொடரும்)………………

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (24-Oct-13, 3:29 pm)
பார்வை : 246

மேலே