நம்பிக்கை
வென்றவனும்
வீழ்ந்தவனும்
வாழ்கிறார்கள்
என் கரம் பற்றி!
பிரிந்த கணவனை நினைத்து
என்னோடு வாழும்
தாய்மைகள் எத்தனை!
வாழ்க்கையை நினைத்து
வெறுத்துப்போன
ஜீவன்கள் எத்தனை!
தோல்வியை கண்டு
துவண்டுபோன
இளைஞர்கள் எத்தனை!
ஜீவனே!
எழுந்து வா என்னோடு
இன்று முதல் நான் உன்னோடு
இப்போதே துணிந்து செல்
உன் வெற்றி பயணத்தில்
வாழ்வது உன் கையில்
வாழப்போவது என் கையில்..