கடல் எங்க தோட்டமுங்க

கடல் எங்க தோட்டமுங்க
அதை ஆளுகிற
மீன் பரவக்
கூட்டம் நாங்க

ஆயிரம் பேர் வந்தாலும்
எதிர்த்து நிற்போம்
அம்மா அடிப்பாளேன்னு
பயந்து நிற்போம்.....

பெத்தவளோடு சேர்த்து
மொத்தமா மூணு தாயி
அம்மான்னு கூப்பிட்டா ஓடி வரும்
கடலும் கன்னி தாயி....

படிக்காத பயலுக நாங்க
பாசத்துக்கு படிக்கல்லுங்க
எங்க வயிறு பட்டினி போட்டு
நம்பி வந்தவன் பசி போக்குவோம்

மானம் பார்த்தா
மசிரு உசிரு போலங்க
நண்பன் கேட்டா
உசிரும் மசிரு போலங்க.....

கடலுக்குள்ள
கரண்டு இருக்குன்னு
கண்டு புடிச்சவன்
என் பாட்டனுங்க ,

சோறு தண்ணி இல்லாம
உடல் சோராம
பாத்துக்க சொல்லித்தந்தவன்
என் தாத்தனுங்க.....

முட்டா பயலுக நாங்க
முன் கோப காரணுங்க நாங்க
அறிவில்லாமல் கெட்ட ஜாதிங்க
எதுக்காகவும் யாரையும் கெடுக்காத ஜாதிங்க....

மீன் வாடையில்
குடியிருப்போம் மனசு
ஆண்டவன் வாழும் கோவிலுங்க

எழுதியவர் : ஆ. லாரன்ஸ் (24-Oct-13, 7:34 pm)
பார்வை : 178

மேலே