இயற்கையின் குமுறல்

'நாங்கள் என்ன பாவம் செய்தோம்'

புற்கள்: பச்சைப் பசேலென வண்ணம்
தீட்டினாற்போல் செழித்திருந்தோம் !
இன்று புகைபடிந்த காற்றில் கரைபடிந்தோம் !
எங்கள் மீதிருந்த பனித்துளியில் தொலைநோக்கியின் சூத்திரத்தை கண்டுகொன்டான்
கலிலேயோ
இன்று அவன் தந்தையே ஆனாலும் சரி !
எங்கள் மீதிருக்கும் கரை படிந்த பனித்துளியில் எங்களின் சோகத்தைத் தவிற
வேறொன்றும் கண்டறிய வாய்ப்பில்லை !

மரங்கள்: என்னவென்று சொல்ல வளர்ந்துவிடுவேனோ என்ற பயம் தான் எனக்கு!
தன்னை விட வேறெவரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மனிதனுக்குள்
வளர்ந்துகொண்டே இருக்கிறது
எங்களின் வளர்ச்சியைக் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!

மலைகள்: உலகில் உயர்ந்தவன் நான் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கி இருந்தது எனைக் குடைந்து பாதையிட்டான்!
இறுதியில் வெடி வைத்து என்னைத் தகர்த்துவிட்டான்!
இன்று அவன் உயரமளவுக்கு சரிந்து கிடக்கின்றோம்!

கடல்: சமுத்திரம் என்ற பெயரை நான் விரும்பினேன்
ஆனால் அது நிலையற்றது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை!
கழிவுகளின் தேக்கிடமானேன் நான்
அதனால் என்னுள் வாழும் எண்ணமுடியா உயிர்களின் கண்ணீரும் என் அளவு உயர காரணமாகின்றது!

மிருகங்கள்: மனிதன் மிருகமாகிறான் என்பதற்கு வேறெந்த உதாரணமும்
தேவையில்லை
காடுகளை அழித்து வீடுகளாக்கிக் கொண்டிருக்கிறான்!

எங்களின் இன்னல்களை மனிதனின் அத்தியாவசியம் என்பார்கள்!
எங்களின் தியாகம் ஒருவரின் உயர்வுக்கென்றால் அதை பாக்கியமாக கருதுகிறோம்
ஆனால் எவனொருவன் சுயநலம்,பொறாமையில்லாமல் இருக்கிறானோ அவனுக்காக மட்டும்!
மற்றவர்களுக்காக எங்களை அழிக்க நாங்கள் "என்ன பாவம் செய்தோம்" !!


........ஆக்னல்........

எழுதியவர் : ஆக்னல் பிரடரிக் ப (24-Oct-13, 9:45 pm)
பார்வை : 93

மேலே