தேர்தல் வந்துடுச்சு
வீதியெங்கும் தோரணம்
சுவரெல்லாம் விளம்பரம்
தேர்தல் வந்துடுச்சு....
மூலவரை
தேடி
உற்சவ மூர்த்தியின்
வீதி ஊர்வலம்
சத்தியத்தை
சாகடித்து
வாய்மைக்கு
வாய்க்கரிசி போட்டு
ஓட்டு கேட்கின்றனர்
இந்த தேசத்தில்
தான்
ஓட்டுக்கள்
விலைக்கு வாங்கபடுகின்றன
கொள்கைக்கு
வாக்கு போயி
காசுக்கு
என்றனது....
இங்கே
மக்கள் மன்னராகவில்லை
மகன்களே
மந்திரி ஆகின்றனர்
போஸ்டர் ஓட்டும்
தொண்டன் ஓட்டுக்கு
அவன் பிள்ளை
இல்லை சீட்க்கு
செத்தவனும்
உயிர் பிழைக்கிறான்
அவன்
சாவடியில் வாக்களிக்கிறான்
இது
அடிப்படை தகுதி
இல்லாத தேர்வு
விரலில் மைதிட்டும் வரை
நாங்க ஹீரோ தான்
திட்டிய பின்பு
மீண்டும் நாங்க ஜீரோதான்