மாயமோ மந்திரமோ புரியவில்ல

மாயமோ மந்திரமோ புரியவில்ல
நீ எப்ப வந்து நெறஞ்சுப்புட்ட மனசுகுள்ள
ராவெது பகலெது விளங்கவில்ல
உன் நெனப்ப தவிர வேரெதுவும் எனக்கு துணையுமில்ல
நீ ஏன் புள்ள வெக்கத்த மழ போல அள்ளி தெளிச்ச
அதுல மறுநாளே புதுக்காலான என்ன மொளைக்க வெச்ச
இனிப்பெது கசப்பெது தெரியவில்ல
உன்ன பாத்தா மட்டும் என் பல்லு இளிக்குது மெல்ல
என்னவோ என்ன பாத்து சிரிச்சு புட்ட
அந்த கன்னக்குழி ஆழதுல என்ன தொலச்சுபுட்டேன்
உன் கால் கொலுசு சத்தத்த கேட்டுகிட்டே
இந்த பாட்டுக்கு மெட்டுதான் போட்டு புட்டேன்
உன் கண்னது பேசும் மொழிகளுக்கு
பல வரிகல பாட்டோடு சேத்து வெச்சேன்
உன் கைவிரல் பேசுனது புரியவில்ல
அதுக்கு அங்கங்க மொவுனத்த புட்டு வெச்சன்
உன் உதடது சொன்னது புரிஞ்சிடுச்சு
அதுக்குதான் எங்கிட்ட வார்தையில்ல
நீ எப்படி நெஞ்சுக்குள்ள தீய வெச்ச
என் அனுவெல்லாம் உன் பேர சொல்லி வெடிக்க வெச்ச
நீ என்னிக்கு எனக்குள்ள வந்துப்போன
எப்பத்தான் உன்ன எனக்குள்ள நெஞ்சிப்போன
மாயமோ மந்திரமோ புரியவில்ல
இத சொல்லதான் எங்கிட்ட வர்தையில்ல!!!!!

எழுதியவர் : ஸ்ரீ (26-Oct-13, 5:18 am)
பார்வை : 135

மேலே