தள்ளியே நிற்குது தீபாவளி

அச்சடித்திட்டதுபோல் அதோ தீப ஒளிவெள்ளம்
அத்துனையும் ஒன்றாக ஆடியசைந்து மகிழ்ந்திடும்
நட்சத்திரமா!, மின்மினியா!, அட- ஓரங்குல தேவதையா?
கச்சிதமாய் இரவுப்பெண்ணை கண்ணுபட அலங்கரிக்குதே !

உச்சத்திலே வானவேடிக்கை, உலாவந்த நிலாஎங்கே?
அச்சச்சோ அச்சம்கொண்டதோ அடுத்தநாள்தான் அதுவருமோ !
சாந்தம்தானே இரவென்றால் சத்தமாக உள்ளதே
சரவெடிகள் உறியடிக்க, அதைமுறியடிக்க பெருவெடிகள்

உருவெடுத்தது பூந்தொட்டி உயரத்தில் பன்னிரண்டடி
ஒலிஒளியோடு சிரித்தது ஒல்லியான சுர்சுர்வத்தி
விருப்பபட்டே வீடுகளில் விழுந்துபுரண்டது சங்குசக்கரம் - அதை
விட்டுதெறித்த முத்துகளை அள்ளபோனால் காணவில்லை

மெட்டுக்கட்டும் எத்திசையும் மேளம்கொட்டியபடி காற்றலையும்
துட்டுப்பணம் உள்ளவர்க்கு உணவும்,உடையும் புதுமையடி
பெற்றவரை அறியாபிஞ்சும், பெயருக்கென வாழ்பவரையும்
தள்ளியே நிக்குது தீபவொளி - என்றும்

தள்ளியே நிக்குது தீபாவளி(லி) !..........

எழுதியவர் : மதனா (26-Oct-13, 7:05 am)
பார்வை : 66

மேலே