ஓடமுடியாத எங்களை வாழவிடுங்கள்

காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!

சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!

உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!

நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல் உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?

ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!

வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்

*****************************************************

( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 2:15 pm)
பார்வை : 209

மேலே