அரசியல் அரசியல்வாதி 7

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

முன் கதை சுருக்கம் :

ஏழை மாணவன் ராஜ்குமார், தன் படிப்பு உதவிக்காக பணம் கேட்ட அந்த ஊர் எம்.எல்.ஏ காசிநாதனை எதிர்க்க, அந்த மோதலின் உச்சத்தில் அவனின் தந்தை மராடைப்பால் காலமானார். பின்பு கடனாக பெற்ற பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளும் கட்சி அலுவலகம் என அரசியல் மேலுள்ள வெறுப்புணர்ச்சியையும் தன் உரிமையும் கேட்க ஆவேசமாக அலைந்தான். சாலை கடக்கும் போது கட்சி வாகனம் ஒன்று அவன் மீது மோதியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து .. மருத்துமனை ஊழியர் மாணிக்கம் வீட்டில் தங்குகிறான் , அங்கு அவனை காப்பாற்றிய IAS முன்னால் அதிகாரி அப்துல் அன்சாரி அவரின் மகள் ஜாஸ்மீனுடன். அரசியல் மாற்றம் பற்றி விவாதிக்கிறான். அப்போது தன்னால் அரசியலை மறுமலர்ச்சியை எளிதாக ஏற்படுத்த முடியும் என்று சொல்லி தான் கடனாக வாங்கி வந்த பண்த்தில் லேப்டாப் வாங்கி தருமாறு கேட்கிறான். பின்பு அந்த மூவரிடம் தன் திட்டத்தை சொல்கிறான், அப்போது தொலைக்காட்சியில் ஒர் செய்தி ஓட்டம் வருகிறது....


இனி................

------------------------------------------------------------



அந்த செய்தி ஒட்டத்தில் சற்று முன் வந்த செய்தியாக “புதிய கல்வி அமைச்சராக காசிநாதன் நாளை பதவியேற்கப்போகிறார். கடந்த 6 மாதங்களில் 3வது முறையாக அமைச்சரவை மாற்றம்”

ராஜ்குமார்........ “கல்வியறிவே இல்லாதவர் கல்வி அமைச்சர்.சட்டத்தை மதிக்காதவர் சட்ட அமைச்சர். இதுயென்ன தமிழ்நாட்டின் தலைவிதியோ? இது முந்தைய ஆட்சியிலும் இன்றைய ஆட்சிலும் நடக்கும் அவலம்.... அட ச்சே....
அரசியல் சர்க்கஸ் கூடாரமாகிவிட்டதோ ? கோமாளிகள் எல்லாம் நம்மை ஏமாற்றுகின்றனர்.. அன்சாரி அப்பா... ! இதையெல்லாம் நாம் தட்டி கேட்க வேண்டாமா ? அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டாமா ?” தொடர்ந்து எத எதயோ பேசி அவனின் ஆதங்கங்களை வெளிகாட்டுகிறான்.”

குறுக்கிட்டு பேசிய ஜாஸ்மீன் “ இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானலும் தேர்தலில் நிற்கலாம், மந்திரி ஆகலாம்.. இவற்றை தடுக்க இப்போதுதான் சட்டங்கள் மாறி வருகிறது தம்பி.... நாம் நம் அமைதி போராட்டத்தை ஆரம்பிக்கலாம்... நாம் மக்களுக்கு சொல்லும் விழிப்புணர்ச்சி கருத்துக்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம்மை , நம் போராட்டத்தை வலு இழக்க எந்த குறுக்கீடும் எந்த ரூபத்திலும் வர வாய்ப்பு இருக்கிறது. சரியா.. ? கவனமாக திட்டம் தீட்ட வேண்டும்.. யோசிப்போம்.”

“ஆம் அக்கா...... இதற்கு நான் எனக்கு தெரிந்த கருத்துக்களை முன் வைக்கிறேன். அன்சாரி அப்பா.. நீங்கள் உங்களுக்கு தெரிந்த நேர்மையாக அதிகாரிகளுடன் கலந்து பேசி ஒர் திட்டத்தை வரையறுத்து சொல்லுங்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களுக்கு இன்றைய அரசியலின் அவல நிலை நன்றாகவே தெரியும்ல்ல..

மாணிக்கம் அண்ணா.. அதுப்போல நீங்கள் ஒர் வரைவு திட்டம் தாங்க... அக்கா... இதுல உங்களுக்கு அதிக வேலை இருக்கலாம்.... ஏன்னா நீங்க ஒரு ரிப்போர்ட்டர்/பத்திரிக்கையாளர், மக்களுக்கு இந்த அரசியல்வாதிகளால் ஏற்ப்பட்ட அவஸ்தை நன்றாக தெரியும்.. அப்புறம்...,

தலைமை செயலக்கத்துல நான் பார்த்த அண்ணா, கட்சி ஆபிஸ்ல பார்த்த அமைச்சர் பி.ஏ அவங்களையும் நம் திட்டத்திற்கு உடந்தையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” ராஜ்குமார் ஒர் பெரிய குழுவின் தலைவனாக தன்னை பாவித்து மடமடவென தன் உள்ளத்தில் உள்ள யோசனைகளை முன் வைக்கிறான்”

“ஆனா இத எல்லாத்தையும் அரசியல்வாதிங்களுக்கு தெரியமா பண்ணுவது கஷ்டம்.. நான், நீ, சார், ஜாஸ்மீன், பி.ஏ, அந்த கான்ஸ்டபிள் ஆக நாம ஆறு பேரும் சரி... இந்த திட்டம் மக்கள்கிட்ட கொண்டு போகும் போது, குறுக்குப்புத்தி உடையவன், எவனாது இருப்பான். தந்திர வேலையை பார்த்து நம் திட்டத்தை “பணால்” ஆககூடும்... சோ பீ கேர்ப்புல்” மாணிக்கம் எதிர் கருத்து சொன்னாலும நல்லதுக்காகவே சொன்னான்.

“இல்ல மாணிக்கம், அதுக்கு என்கிட்ட நல்ல ஐடியா இருக்கு... யாருக்கும் நாம் தலைமை ஏற்க போவதில்லை, மக்கள் அவங்க நல்லதுக்கு அவங்களே போராடப்போறாங்க... நீ சொன்னது போன்ற வல்லூறுகள் தானா அடங்கிடும்..

சரி திட்டத்தின் பெயர் நான் செலக்ட் பண்ணி இருக்கேன்.. --- மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம்------

எல்லோருக்கும் ஒ,கே.வா?” அப்துல் அன்சாரி

எல்லாரும் வெற்றி சின்னத்தை காட்டி சம்மதம் என்கின்றனர்...

“ஆனா இதற்கு கால அளவு வேணும் அன்சாரி அப்பா” ராஜ்குமார் அவசரப்படுகிறான்.

“ யெஸ்.. ரொம்ப நாள் நீட்டிக்கக்கூடாது.... லீகல்லாவும் போகணும்... அதேப்போல கூட்டத்தை கூட்டவும் கூடாது “ ஜாஸ்மீன்

“அதிகப்பட்சம் 1 மாதம் .. சரியா... ராஜ் .. இன்னிக்கு நீ தூங்குப்பா....இனி 1 மாசத்திற்கு நமக்கு தூக்கம் இல்ல.. ஜாஸ்மீன், மாணிக்கம் நீங்க ரெண்டு பேரும் அதிக நேரத்தை இதற்கு ஒதுக்கிடுங்க... வேலைப்போனாலும் பரவாயில்ல........” அன்சாரி..

எல்லாரும் கலைந்து செல்கின்றனர். அடுத்த நாள் விடியலை எதிர்ப்பார்த்து.............


-------------(தொடரும்)--------------------------

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Oct-13, 3:59 pm)
பார்வை : 196

மேலே