அழகாய் ஓர் கூடு வேண்டும் அனாதை எனக்கு

மடி சாய்த்து தலை நீவி
தாலாட்டுப் பாட
அன்னையில்லை

கண்டிப்பாய் பேசி
கடைக்குட்டி என்னை
பள்ளிக்கூடம் கூட்டிப்போக
தந்தையில்லை

செல்லமாய் தட்டிவிட்டு
செருக்காய் நடக்கும்
அண்ணன் இல்லை

எட்டி உதைத்து சண்டையிட்டு
ஏளனமாய் சிரித்துச் செல்லும்
தங்கையில்லை

அத்தனையும் அமைதியாய்
பார்த்துச் சிரிக்கும்
அக்காள் இல்லை

தட்டிக் கொடுக்க
தாத்தா இல்லை
தடவிக் கொடுக்க
பாட்டி இல்லை

விடுமுறைக்குச் சென்றுவர
வெளியூரில் யாருமில்லை
அத்தனையும் இல்லாது
பிறப்பித்து விட்டாய் இப்பிறவியில்

கடவுளே
அடுத்தமுறையும் படைத்துவிடாதே
இப்படி ஓர் அனாதையாய்

எழுதியவர் : ராஜதுரைமணிமேகலை (27-Oct-13, 11:04 am)
பார்வை : 109

மேலே