சொல்லமுடியாத வலிங்க

இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே ??

கொடுமையான நரக வாழ்க்கைங்க ,

திரும்பிய பக்கம் எல்லாம் பணம் இருக்கும்,ஆனால் நிம்மதி இருக்காதுங்க ,

நாங்கள் விமானம் ஏறினோமோ அன்னைகே எங்கள் காதல் தோல்விதாங்க,

பணம் வேலை இந்த இரண்டு சக்கர வாகன பயணம் எங்கள் வாழ்க்கைங்க ,

மனம் விட்டு பேச ஒரு ஆறுதல் கிடையாது.
ஒரு தமிழனை பார்த்தால் குடும்பத்தில் ஒருவனை பார்ப்பது போல் ஒரு சந்தோஷம்ங்க,

சாப்பாட்டில் உப்பும் காரமும் இருக்கிறதா ? என்று எங்களுக்கு தெரியாதுங்க ..ஆனால் கண்ணீரில் உப்பும் மனதில் காரத்தையும் வைத்து கொண்டு வாழுறோம்ங்க.

45 நாள் விடுப்புக்கு மட்டும் எங்க மனசு பூக்கும்ங்க.ஆனால் 44வது நாள் நைட் எங்க மனசு வாடிடும்ங்க,

இங்க அப்பா அம்மா இல்லைங்க , நாங்களே எங்களுக்கு உறவுதாங்க,

நாங்க அடிக்கடி சொல்லுற ஒரு வார்த்தைங்க -""பணம் எப்படியாவது அனுப்பிடுவோம்னு தாங்க "",,
கஷ்ட படுறோம்ங்க.

.தங்கச்சி கல்யாணத்துக்கு பணம் அனுப்பிடுவோம்ங்க ,,ஆனால் கல்யாணத்துக்கு நாங்க போகமாடோம்ங்க.

.குழந்தை பொறந்துடும்ங்க,,ஆனா பாக்க முடியாதுங்க,,அப்பா ஆனா அப்பாவிங்க
,எங்களுக்கு தாங்க அந்த வேதனையும் வலியும்,

.நாங்க சென்ட் அடிச்சுட்டு நாட்டுக்கு வரலைங்க,,எங்க ரத்த வாடை உங்களுக்கு தெரியகூடாதுனு தாங்க பூசிக்கிறோம்

.நாங்க நெறைய பொய் பேசுவோம்ங்க -நாங்க சந்தோஷமா இருக்கோம்னு.

ஏதோ ஒன்னு இன்னும் தேடி அலைஞ்சிகிட்டே இருகோம்ங்க ,,ஆனா என்னான்னு தான் தெரிலைங்க.

அம்மா வச்ச சாம்பார் குழம்பு சாப்பிடலான கூட பரவாஇல்லைங்க,,ஆனா மோந்து கூட பாக்க முடியாதுங்க..

அடிக்குற வெயில மனக்குற மல்லிபூ கூட ""ஐயோ" னு கத்தும்ங்க,நாங்க கத்தமடோம்ங்க,,ஏன்னா கத்த நாக்குல தண்ணி இல்லைங்க,

,இன்னும் கஷ்ட பட நாங்க தயார்ங்க,எங்க குடும்பம் சந்தோஷமா இருந்த போதும்ங்க,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (27-Oct-13, 1:23 pm)
பார்வை : 751

மேலே