எதாவது சொல்லிட்டு போ
எவ்வுசுர உரைய வெச்சி
மனச மரைய வெச்சி
என்ன ரணமாக்குற..
பதில் பேச நீ மறுக்குற..
எந்நெனவ மறக்க வெச்சி
கனவுல மிதக்க வெச்சி
எங்கூட விளையாடுற..
என்னை ஏற்க ஏன் மறுக்குற..?
எங்கொசுரு உசுரயும் உனக்கு தர்ரே..
எம்மனச மடியில நீ ஏந்திக்க..
எம்மூச்சு காத்துல நீ வாழுற
கொஞ்ச(ம்) பேச்சு பேசிட்டு நீ ஓடுற..
எங்கண்ணுல காதல காட்டிட்டேன்..
உங்கண்ணையும் காட்டுன்னா நீ ஓடிட்ட..
பார்வை உம்பக்கமா திரும்புது,
பாத்தும் பாக்காம நீ போனா
பதறி நெஞ்சும்தா சிதறுது..
நெத்தி மத்தியில வந்து
எட்டி பாக்குற..
எட்ட நின்னு என்ன
வெட்டி போடுற..
எம்மனசுல உனக்கு
இடம் போட்டிருக்கேன்..
நீ வந்து சேர
தடமும் போட்டிருக்கேன்..
பாத புரியலன்னு சொல்லாத
பாதிமனசோட என்ன கொல்லாத..
எவ்வாழ்கைல நீ சேந்தாச்சு
வாழவும் திட்டம் போட்டாச்சு..
விரும்பி வாழ வருவியா-இல்ல
விஷத்த விருந்தா தருவியா..?
பத்து வார்த்த பேசி
எங்காதல உனக்கு சொன்னேன்
ஒத்த வார்த்த பேசி
உம்பதில எனக்கு சொல்லமுடியாதா?
நீ சொல்ற அந்தா வார்த்தைல
நாம சேருற அந்த நாளுல
நம் காதல் நம்ம பேசும்
பனிக்காத்துல அலையா அது வீசும்...
எங்கனவு உம்பதிலால பழிச்சிருமா-இல்ல
உம்மௌனம் கனவ கலச்சிருமா..?