வாங்கித்தின்ன பேடிப்பயலே

அம்மிணி பிடித்து அவலம்
அம்மணமாய் ஆடுது பாரு.....
அரசமரத்து
ஆண்டிப்பிள்ளையாரு
கோவணம் கிழிந்து
ஓடுது பாரு......
முக்காடு போட்டு,
முச்சந்தியில் மூத்திரம்
நாறுது பாரு....
மூக்கைபிடிச்சிகிட்டு
மூணு லட்சம்
கொண்டு வந்துட்டாரு......
ஓட்டு வாங்கிட்டு
வேட்டு வச்சிட்டு
போயிட்டாரு......

இனியொரு தடவையும்
வருவாரு.....
ரெண்டு நோட்டு
தருவாரு....
கையெடுத்து துதிப்பாரு...
மறுபடியும்
தூக்கிப்போட்டு மிதிப்பாரு...
வெறுங்காடு வெடிக்குது பாரு
வெள்ளாம துடிக்குது பாரு
கஞ்சிப்பானை கரிக்குது பாரு
காலித்தட்டு இழிக்குது பாரு
கடவுளா வந்தாரு.....
குவாட்டருக்கு காசு தந்தாரு
அட...
வாங்கித்தின்ன வெங்கப்பயலே
என் வயிறு எரியுது பாரு...
கேனப்பய மந்திரியாரு...
கோணப்படையோட
வந்தாரு பாரு....
கோணிப்பைய தூக்கிக்கிட்டு
யானப்படையோட
போறாரு பாரு.....
அட.....
வெங்கப்பயல வெறும்பயலே
அவரு கொட்டாவி விட்டு
தூங்கப்போறாரு.....
நீ கொடிபிடித்து
தாங்கப்போறியா.....
மாடி வீடு கட்டப்போறாரு....
நீ தாடி மயிரைக்காட்டி
கோடி ரூபா கேட்கப்போறியா?

பேடிப்பயலே பேடிப்பயலே
அரைமயிரும்
அமைச்சரிடத்தில்
அசையாது
உன் குறைமயிரையெல்லாம்
குழி தோண்டிப்புதைக்க
போறியா
வாங்கித்தின்ன பேடிப்பயலே.....
(அன்பு உள்ளங்களின் கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்)

எழுதியவர் : ருத்ரா (27-Oct-13, 1:54 pm)
பார்வை : 527

மேலே