காதலுக்கு மரியாதை
எழுதி வைத்த அனைத்தும்
அழகாகவே இருக்கிறது,
ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில்
அவள் பெயர்!
ஒரேமாதிரி,
கூந்தல் உதிர்ந்த பூவை
புத்தகம் நசுக்கிய பக்கம்
"ஓவியம் சூடிய பூவொன்று
பூ ஓவியம் வரைந்தது!"
என் முதற் கவிதை,
மதலாக,,,
"உன் கன்னக்குழியில்
என் பதிவை தூசுதட்டி
கன்னம் கடிக்கும்
நம் குழந்தை!
குறளடி வயதில்,
தாய்மை அழகு!"
இப்படி,
எல்லாம் அவள் சுமந்த கவிகள்
நிரம்பிய புத்தகம்!
சுட்டுப்போட்டும் வாராத
அந்த ஆங்கிலப் புத்தகம்!,
கடைசியாக,
களவாடிய பொழுதுகளுக்குப் பரிசாக
அவள் பேனாவும்,,,
அந்த புத்தகமும்,,,
பொட்டு வைத்து பூ வைத்து
ஆயுத பூஜையில்!
வயதும் ஐம்பதாகிறது,
என் முதற்காதலுக்கு!,