எங்கள் ஊர் நாகரிகம்

பசும் புற் தரைகளை மறைத்து
மண்டபம் கட்டினார்கள்...
ஓடும் நதிகளைக் கூட
ஓரங்கட்டினார்கள்...
வயல் வெளிகள் எல்லாம்
மைதானம் என்றார்கள்...
நாகரீகம் என்று சொல்லி
நாசம் செய்தார்கள்...

கடற்கரையில் சுவர் அமைத்து
காற்றிக்கும் காசு கேட்டர்...
கல் நெஞ்சக்காரனுக்கு மட்டும்
தலைவன் எனும் நாமமிட்டர்...
ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிக்க மட்டும்
ஒற்றுமையை நேசித்தர்...

நகரமில்லை என்ற போது
நண்பர்களாய் நாம் இருந்தோம்...
நகரமென்று ஆன போது
எதிரிகளாய் மாறி விட்டோம்...
பொருளோடு சேர்த்து மனதையும்
மாற்றி விட்டதோ இந்த நாகரீகம்???

வேண்டாம்!!!

அண்ணன் தம்பி உறவே போதும்,
அறிந்தவன் அறியாதவன் பேதம் வேண்டாம்...
அமைதியான காற்றே போதும்,
குளிறேற்றியில் குடித்தனம் வேண்டாம்...
கால் நடையாய் நண்பன் போதும்,
கார் பயண‌ம் தனிமை வேண்டாம்...

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (28-Oct-13, 9:37 am)
Tanglish : enkal oor nagarigam
பார்வை : 841

மேலே