மழை

அகிலமெலாம் நீலம் விரித்து
அழெகெனப் படர்ந்த "நீரின்" மேல் !
ஆசையாய்க் காதல் கொள்ளும் "கதிரவன்" !
தன் கரங்களை நீட்டி அவளை வருட !
அவன் கரம் பட உருகிய அவள் அவனிடம் மயங்க !
காதலின் வெப்பத்தால் அவனிடம் சேர தன்னிலை மாறி
கரைந்துருகிப் புறப்படுகிறாள் "நீராவியாக" !
காற்றும்,தூசும் அவளைத் தடுத்து நிறுத்த !
அவன் மேல் கொண்ட மோகத்தில் தன் இடம் திரும்பாமல் அங்கேயே தங்கி விடுகிறாள் "மேகமாக" !
அவனைச் சேர அலைந்து திரிந்து முடியாமல் போக !
கருநிறமுடுத்திக் கண்ணீராகக் கரைகிறாள் பெருந்துயருடன் !
அவள் முழுவதும் கரைந்து !
இயற்க்கையின் விதி புரிந்து !
தன் இடம் திரும்புகிறாள் "மழையாக" !!!!

........ஆக்னல்........

எழுதியவர் : ஆக்னல் பிரடரிக் ப (28-Oct-13, 9:22 am)
Tanglish : mazhai
பார்வை : 71

மேலே