இன்று எதுவுமில்லை

இதுபோன்ற இரவொன்றில் தான்
மின்மினிப் பூச்சிகள் பிடித்திருக்கிறேன்
பொன்வண்டு முட்டையிட்டதாவென
அடைத்து வைத்த தீப்பெட்டியை
கவனமாய்த் திறந்து பார்த்திருக்கிறேன்
வரப்பு நிறைந்து விட்டதாவென
நீர்பாய்ச்சுகையில் காத்திருந்திருக்கிறேன்
கனரக வாகனமொன்றின் கண்ணாடியைத்
துடைத்து சுத்தமாக்கியிருக்கிறேன்
விடிய விடிய புரளி பேசியிருக்கிறேன்...
புகைத்திருக்கிறேன்
இன்று எதுவுமில்லை
உன் நினைவுகளையும்
இந்த சொற்களையும் தவிர.

எழுதியவர் : மழைக் காதலன் (28-Oct-13, 11:45 am)
பார்வை : 51

மேலே