காலை நேரக்காதல்

பச்சை புல்வெளியை
பனித்துளிகள் கட்டி அணைக்க
அவைகளின் மோகம் உணர்ந்து
மேகத்துள் ஒளிந்துகொண்ட
சூரியனால் விடிவதில் தாமதம்..
காட்சி முடிந்து மேல் எழும்ப
அதை கண்டு பனித்துளி
ஓடி மறைந்தது..

வீசும் காலை தென்றலில்,
நாணல் எல்லாம் அசைந்தாடி,
காதலோடு உரசி கொண்டது...
நாணல் காதல் பார்த்து
நாணம் கொண்ட சூரியகாந்தி
தன் காதலன் கதிரவன் பார்த்து
ஏங்கியது...
உரசி கொள்ளும் இன்பம் வேண்டாம்
நாள் முழுதும் உன்னை
பார்த்தால் போதும்..
இரவில் மறையாதே என..

ஆயிரம் காதலர்கள் கொண்ட
அழகு சந்திரன் வருவான் எனவே
அந்த நேரம் வேண்டாம்
இந்த நேரமே காதல் செய்
என சமாதனம் சொன்னது சூரியன்..

தூங்கு முஞ்சி சூரியனே
காரணம் சரி இல்லை..
புல்வெளியின் காதலை
புரிந்து கொண்டு ஒளிந்த நீ..
உன் முகம் பார்க்கவே
உயிர் வாழும் என் காதலையும்
புரிந்து கொள்..
காலை நேரமாவது உன்
கருமேக நண்பனுக்குள்
மறையாமல் இரு..
மாலை வரையாவது
மனமார உன் முகம் பார்க்கிறேன்..

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (29-Oct-13, 11:33 am)
Tanglish : kaalai nerakkaathal
பார்வை : 345

மேலே