நாளேடுகளில் நாம்
நாளேடுகளில் நாம் பார்க்கும்
முதன்மை செய்திகள்....
கொலை கொள்ளை, கற்பழிப்பு ... சினிமா ....
இதை தவிர்த்து என்றேனும்
சமுக சிந்தனை பக்கங்கள்
நம் பார்வையில் விழுந்துள்ளதா? ....
இல்லை என்பது தான்
பலரது பதிலாக இருக்கும் ...
ஆம்
அடுத்தவர்களின் அல்லல்கள்கள் தான்
நமக்கு மிக சுவாரிசயமானதாக இருக்கிறது ...
சமுக சீர்கேடுகள் ....
வாசிக்க படுவதற்காக மட்டும் அல்ல
அவைகள் வேரறுக்க படவேண்டியவை ...
வெறும் மண் புழுக்களாய் வாழ்ந்தது போதும் ...
வாளெடுத்து வேரறுப்போம் ...
வாருங்கள் தோழர்களே ...
மனிதம் காப்போம் .....