புரிகின்றது

உண்மையை சொல்வதை விட,
மற்றவர்களை காயபடுத்தாத சில பொய்கள் கூட மற்றவர்களை சந்தோஷ பட வைக்கும்...

தகுதி உள்ளது என்று கருதி,
மற்றவர்களை தாழ்த்தப்படுத்துவது இழிவு...

கோடைக்கும் விடிவு யிருக்கு,
அவர் அவர் சோகத்திற்கும் மறுவாழ்வு யிருக்கு...

முட்ட வரும் வார்த்தை கூட,
மோதி பார்க்கிறது மௌனங்களாக காதலிக்கும் போது...
கட்டி வைத்த போது கூட,
எட்டி பார்க்க ஆசைபடுகிறது கண்ணீர் காதல் விட்டு சென்ற போது...

வருத்தப்படாத நாட்கள் சென்று விட்டு,
இனிமேல் வருத்தங்களை சுமந்து சொல்லும் வாழ்க்கை என்று ஆகிவிட்டது...

காலங்கள் தள்ளி சென்ற போதும்,
சில நண்பர்கள் நம்மை விட்டு விலகாதது இளமையை கூட்டும் நாட்கள்...

தோல்விகள் இருப்பதினாலோ,
பிறர் வெற்றிகளுக்கூட சந்தோஷப் படுகின்றோம்...

கல்வி நம்மை யார் என்று கற்று தந்தது,
வாழ்க்கை மற்றவர்கள் யார் என்று கற்று தருகிறது...

எழுதியவர் : காந்தி. (29-Oct-13, 11:18 pm)
பார்வை : 139

மேலே