பிறந்த நாள்
வாழ்க்கை தேய்மானத்தை
வருடத்திற்கு ஒருமுறை
பதிவு செய்யும் நாள்காட்டி தோழன்
இன்று வரை சேர்ந்த
மற்றும் பிரிந்த நண்பர்கள் மட்டுமே
வரவு செலவு கணக்கில்
பெற்ற வெற்றிகளும் சந்தோஷங்களும்
அடைந்த தோல்விகளும் கவலைகளும்
லாப நட்ட கணக்கில்
உடலின் நிலையும்
செல்வத்தின் நிலையும்
எடுத்து காட்டுகிறது
சொத்து பக்கத்தில்
உறவுகளின் நிலைபாடு
வார கடன் பக்கத்தில்
பிரிவுகள் அனைத்தும்
வாரா அய்யகடன் பக்கத்தில்
சண்டைகளும் கோபங்களும்
தவறான பதிவுகளாய்
இப்படி எத்தனையோ பதிவுகள்
மனதோடு
ஒவொரு பிறந்த நாளும்
வழக்கையின் இருப்பு நிலை குறிப்பாகவே
அமைகின்றது
எழதுவது மட்டும் காலமாய் உள்ளது
இதோ இன்று என் பிறந்த நாள்
வாழ்த்து சொல்ல அழைகின்றேன்
சிலரை
என் தாய் தந்தையை
குலதெய்வத்தை- என்
குலதெய்வம் அய்யனார்
ஒரு வேலை இந்த அய்யனார்
மூன்றாம் தலை முறை முன்பு - என்
தாத்தாவாக கூட இருக்கலாம்
இப்படி தான்
மாரியம்மன் காளியம்மன்
அங்காளம்மன் தெய்வங்களும்
என் பாட்டிகளாய்
முன்னோர்களை தெய்வமாய்
வழிபடுவது தமிழர்களின்
தனி சிறப்பு
அடுத்து மறைந்த முன்னோர்களை
மறைந்தவர்களுக்கு மட்டுமே
எதுவும் தர தேவையில்லை
தருவதற்கும் ஒன்றும் இல்லை என்னிடம்
அடுத்து அநாதை இல்ல வாசிகளை
அனாதைகள் மட்டுமே கடவுளின் குழந்தைகள்
கடவுளின் குழந்தைகள்
வாழ்த்துவது காலத்தில் சிறந்தது
அனைத்திலும் மேலாக
வாழ்த்த அழைக்கிறேன் உங்களை
என்னை வாழ்த்த உங்களை அழைக்காமல்
வேறு யாரை அழைக்க