தீபாவலி வாழ்த்து

தீபாவளி!தீபாவலி!

கொள்ளை லாபம் கூட்டி
கொப்பரைப் பணம் நிரப்பி
அள்ளும் வியாபாரத்தின்
அநியாயத் தீபாவளி!

பாவக் கை கோர்த்து
சாபச் சனிச் சேர்த்து
கூவக் குளிக் குளித்து
தீபாவளி வாழ்த்து!

பாவத் தீயேற்றி
தேகந் தனையூற்றி
சாபத் தூபங் காட்டி
ஆகுதோ கொண்டாட்டி!

சாதியும் மதங்களும்
பேதங்கள் வெடிகளாம்.
நீதிச் சமூகமும்
நிதமழித்துக் கொணடாட்டம்.

காமக்களியாட்டம்
களவாடுங் கரகாட்டம்
தூமப் பயல்களின்
விளையாட்டும் வீதியாட்டம்.

இப்படிப் பாவங்கள்
எப்பத் தொலைப்போமோ
அப்போதுத் தீபாவளி
தப்போதுக் கொண்டாடு.

எதுக்கய்யா தீபாவளி
வருசந்தோறும் விருந்தாளி?
அதுக்குணு ஒரு வாழி
அத எழுதும் விருதாளி.

என்னத்தக் கொண்டாடி
என்னத்தக் கிழிச்சீங்க?
சொன்னதக் கொண்டு ஆடி
என்ன அத்து ஒழிச்சீங்க?

பாவமும் தொலஞ்சுதுணு
தீபமும் கொளுத்துணு
சேமமாச் சேத்ததணு
நாமமும் போடுங்கண்ணு.

ஆண்டுக்காண்டு தீபாவளி.
மீண்டுமீண்டுங் கடனாளி.
கொண்ட துணி புதுசாச்சு
செஞ்ச சனி என்னாச்சு?

ஒரு பாவி செத்தான்னு
ஊரெல்லாம் கொண்டாட்டம்.
மறுபாவி மறு கரைணு
மனிதரோட ஆண்டாட்டம்.

நல்லதச் சொல்லத் தான
நட்டி வச்சாங் கொண்டாட்டம்.
உள்ளத உணந்தீங்கன்னா
உண்மையது கொண்ட ஆட்டம்.

ஆடவும் பாடவும்
அதற்குத்தான் கொண்டாட்டம்.
குடிக்கவும் கும்மாளமும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்.

அடப் போங்கடாப் புளிச்சதடா.
அர்த்தம் எல்லாம் ஒளிச்சதடா.
பொய்யான ஆட்டமடா.
புறட்டிப்போட்டு அழிச்சதடா..


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (30-Oct-13, 10:19 am)
பார்வை : 183

மேலே