ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

வளர்ப்போம்
புறத்தில் மரம்
அகத்தில் அறம்

நல்லது
நினை பேசு செய்
நடக்கும் நன்மை !

உணருங்கள்
ஆடம்பரமன்று அவசியம்
கல்வி !

சேமிப்பில் சிறந்தது
வளமாக்கும் சேமிப்பு
மழை நீர் சேமிப்பு !

இல்லங்களில் இன்று
வழக்கொழிந்தது வரவேற்பு
தொ(ல்)லைக்காட்சி !

தேய்பிறை
வளர்பிறையாகுமா ?
அரசுப்பள்ளிகளில் தமிழ் !

உறவுகள் மட்டுமல்ல
ஊரும் மரணத்திற்கு அழுதால்
வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !

இறப்பு இல்லை
இறந்தும் வாழ்கிறார்கள்
பொதுநலவாதிகள் !

வராது நோய்
பசித்த பின்
புசித்தால் !

உச்சரிக்க வேண்டாம்
முன்னேற்றத்தின் எதிரிகள்
முடியாது தெரியாது நடக்காது !

நாளை என்று
நாளைத் தள்ளிட
நாள் உன்னைத் தள்ளும் !

உடலை உருக்கும்
உருவமில்லா நோய்
கவலை !

பெறுவதை விட
கொடுப்பதே இன்பம்
பொதுநலம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (30-Oct-13, 8:56 pm)
பார்வை : 97

மேலே