காமத்தில்

ஊடலுவமையின் உவமேயம் எந்தன் நாயகன்
ஊடலே காமத்தின் முதல் நிலை - அதுவே
பிறிதொரு நிமிடத்தில் பேரின்பம் பயக்கும்.

பனி விழும் சமயத்தில் இளமதி தொடும் இரவில்
புணரும் தருணம் - வேற்றுமை மயக்கம்.
நுதல் தரும் வெப்பத்தில் முளைத்த வியர்வைக்
கடலில் மூழ்கிச் சாகுமுன் உந்தன் இதழ்
பற்றி நீந்தி எழுந்திடும் அணங்கிவள்.

என் மணாளன் இமைமோதி கயல்விழிகள்
காயமுறக் காணலுற்றேன் - கழுத்து வேர்வை
ருசித்து நிந்தன் காதல் வேட்கை தணித்திட்டான்.

நெற்றித் தரள நீர்கொண்டு எந்தன் மங்கலக்
குங்குமத்தில் ஓவியம் இழைந்தனென்- வேல்விழியசுரன்.
பெண்ணடிமைத்தனத்துக்கு விடிவேயில்லை இந்தக்
கவின் மிகு கலவா ணாதிக்கத்தில்...??

மோகன நாடகத்தில் அவனோ என்னுள் புதைந்திருக்க
மோதும் விரகத்திலே நானோர் பேதையைப் போலுணர்ந்தேன்
வெள்ளிப் பனியுருகி என் நெஞ்சில் வீழ்ந்திட நாணலுற்றேன்
கள்ளத்தனம் கொண்டெந்தன் உள்ளழகைத் தீண்டுகையில்...

அவன் நுனி நாக்கின் ஈரம் தெறித்து
என் செவிமடல் சிவக்கக் கண்டேன்.
கயவனவன் கலவி மொழியின் உயிரெழுத்துக்கள்
என் மேனி தனில் மெய் யெழுத்துக்களாய்...

உயிர்க்கொடி பூக்கச் செய்யும் ஆண்மழையில்
நனைத்து நித்தம் நெஞ்சில் சுமந்தவனையென்
கருவறைக்குள் எடுத்துச் சென்றான் - தாம்பத்யத்
திளைப்பு முற்றுப்பெறும் அந்திப்பொழுதெனவொரு
கற்பனைக் கவியொன்றை சமைத்திட்டேன்
நானெனும் - கன்னித் தமிழச்சி ....

மனோபுத்திரன்

எழுதியவர் : மனோபுத்திரன் (31-Oct-13, 12:11 am)
பார்வை : 3866

மேலே