பாசத்துக்கும் பட்டினி
பாதி இருள் கழிந்தும் இமை இரண்டும் இணைய மறுக்கின்றது...
விழிகளில் வலிகளின் கணம் கண்ணீரில் கலைகிறது...
பலரோ கனவுகளில் என்னை போல் சிலரோ அல்ல நான் மட்டுமோ தலையணைக்கு பாரமாய்...
நினைவு அலைகளில் நீந்தினால் கரை சேர்ந்து விடலாம் நானோ தத்தளிக்கிறேன்...
பாசத்துக்கும் பட்டினியா பரிதவித்தலுடன் விடியல்..
பர்ஷான்