சொல்
கவிதையிலிருந்து
வழி தவறிய
அச்சொல்லைத் தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
தனித்தலைந்து
சோர்ந்து
தவித்து
பசித்து
கிறங்கிக் கிடக்கலாம் எங்காவது,
பிறகு அச்சொல்லைத் தேடியலைந்ததை
மெனக்கெட்ட
காலத்தை
அதன் பிரதியொன்றை
.உருவாக்கிக் கொண்டதை
எப்படியாவது சொல்ல வேண்டுமதனிடம்