தீபாவளி சிறுவர் கவிதை

இந்தியத் திருநாட்டின்
வாண வேடிக்கை திருவிழா!
படபடவென்று
பட்டாசு வெடித்து
இனிப்பு பலவற்றை
நாவில் சுவைத்து
அரக்கனை அழித்த
நாளை நினைத்து
நல்லதை மட்டுமே
மனதில் இருத்து!

நல்லவர் நடுவே
தீயவர் சிலர்
அந்தக்காலம்!
தீயவர் நடுவே
நல்லவர் சிலர்
இந்தக்காலம்!

சீட்டு மோசடியும்
கோழி மோசடியும்
செல்போன் திருட்டும்
செயின் பறிப்பும்
பஞ்சமே இல்லாமல்
பரவிக் கிடக்கின்றன!

பள்ளிக் கூடங்கள்
தனியாரிடமும்
மதுக்கூடங்கள்
அரசாங்கத்திடமும்
தலைகீழாக
தவம் செய்கின்றன!

படிக்க வேண்டிய
இளம் பட்டாம்பூசசிகள்
கந்தக குவியலில்
கிழிந்த காகிதமாய்!

ஆயிரம் இருந்தாலும்
இந்த நாட்டில்தான்
நாம் வாழப் போகிறவர்கள்!
நம்மில் சிலபேர்தான் நாளை
நாட்டை ஆளப்போகிறவர்கள்!

உண்மையாய் ஒழுக்கமாய்
நல்லவனாய் வாழுவோம்!
நாளைய பாரதத்தை
நேர்மையாய் ஆளுவோம்!

எழுதியவர் : சுபாப்ரியன் (31-Oct-13, 1:58 pm)
சேர்த்தது : subapriyan
பார்வை : 98

மேலே