சிதம்பர தரிசனம்
தில்லையின் கூத்தனை காணசென்றேன்
மயிலையில் வாழும் மகளான நான்...
பெற்றோரை காண ஏற்றேன்
பேருந்தில் புனித பயணத்தை...
நாற்திசையிலும் அவனே அழைத்தான்
நாற்புற வாயில் காட்டி....
வாழவைப்பவனை வணங்கி எடுத்துவைத்தேன்
வலதுகாலை பிறந்த வீட்டில்....
துர்க்கை அம்மன் துணையாய் நிற்க
சிவ பாலர்கள் வரவேற்றிட......
என் மனம் இதமாய் தொலைந்தது
எங்கும் நிறைந்த இறைவனின் அருளில்.....
உணர்ந்தே சென்றேன் மேலும் உள்ளே
உருகி நின்றேன் உயிரே என்றேன்.....
உனக்கே என்றே வழங்கினான் அவன்
உள்ளம் நிறைய வரங்களை....
வாத்திய தாளங்கள் விண்ணை பிளக்க
வாசனை திரவியங்கள் மனம் பரப்ப
மஞ்சள் மலர்கள் அழகு சேர்த்திட
மாலையில் கண்டேன் உன் திருக்கோலம்....
கண்மூடி நின்றேன் கைகூப்பி தொழுதேன்
கண்திரந்தாய் காட்டினாய் உன் ரகசியம்
நெஞ்சம் நிறைந்தது, பாரம் குறைந்தது
நிம்மதியில் மனமெல்லாம் ஒலித்தது "சிவசிவ "..