அழகிய அறிவுரை
சீற்றம் கொள்ளும்
சிங்கமெனத் தெரிந்தும்
சீண்டிப் பார்க்கலாமா...?
முன்பே இதைச்
சீர்த்தூக்கி சிந்திக்க வேண்டாமா...?
சீழ்பிடிக்கும் தேகத்தை
சீக்கிரமே ஆற்றிவிடு
இல்லையேல்
சீவி எடுக்க வேண்டி வரும்
எனக் கனிவுடன்
மூதாட்டியொருவள்
அறிவுரைச் சொன்னாள்
வேடனுக்கு...!