உண்மையில் தீபாவளி

பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும்
பட்டாசுக்கு செலவிடும் பணத்தை
பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து
ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி !

பலவித பலகாரங்கள் பக்குவமாய் செய்து
சுற்றம்நட்புடன் பகிர்வதற்கு பதிலாக
சிலவறியோர் குடிசை கதவுதட்டி
இன்முகத்துடன் தருவதே தித்திக்கும் தீபாவளி !

உறவுகளுக்குள் மனக்கசப்பு உண்டெனில்
நல்ல நாளில் நாடிப்போய்
விரிசலால் பிரிவு வருமுன்பே
உறவை புதுப்பிப்பதே உன்னத தீபாவளி !

சொந்தம் ஒதுக்க அனாதைஇல்லம் அரவணைக்க
அன்பிற்கேங்கும் ஆதரவற்ற முதியோரின்
நொந்த உள்ளம் ஆறுதலுற பேசி
பொழுதுபோக்கும் காலமே பொன்னான தீபாவளி !

தொலைக்காட்சியின் உத்தியால் ஈர்க்கப்பட்டு
விழியில் விளக்கெண்ணெய் விட்டவாறு
விலைமதிப்பில்லா நேரத்தை தொலைக்காமல்
வீட்டாருடன் உறவாடுவதே உல்லாச தீபாவளி !

வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி
வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர
வருகின்ற தீபஒளி திருநாளில்
தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி .....!!!



அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Oct-13, 8:32 pm)
பார்வை : 8273

மேலே